Posts

Showing posts from June, 2021

உணவு என்பது என்ன?

Image
  உணவு என்பது என்ன?           ஓர் உயிற்கு செயல்படத்தேவையான சக்தியை அளிக்க கூடிய பொருட்கள் உணவாகும் .அதில் முதனமையானதாக, கார்போஹைட்ரேட்டு (அரிசி, கிழங்குகள், தானியங்கள்) கொழுப்பு (தாவர எண்ணெய் வித்துக்கள்,விலங்கு கொழுப்புகள்) புரதம் (பருப்பு வகைகள்,விலங்குகளின்மாமிசம், முட்டை) தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் (கீரைகள், பழங்கள்) மனிதர்கள் தனக்குத்தேவையான சக்தியை தாவர, விலங்குகளை உணவாகௌட்கொள்வதன்மூலம் பெற்றுக்கொண்டார்கள்.           ஆதியில் தனக்கான உணவை இயற்கையாக காடுகளில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். நாகரிகம் வளர வளர, நாடோடி வாழ்க்கையின் கடினத்தைஉணர்ந்த மனிதன் தனக்கான உணவுகளை தானே உற்பத்தி  செய்துகொள்ளும் யுக்தியை அறிந்தான் அதுவே விவசாயம்   என்பதாகும். ஆதிகால விவசாயம்         அவ்வாறாக இயற்கை சூழலில் காடுகளில் உள்ள ஆற்றுப்படுகைகளில் தண்ணீர் மற்றும் தாவரம் வளர ஏற்ற மண்வளம் இருந்தபடியால் அங்கேயே விவசாயம் செய்யட்துவங்கினார்கள். மனித நாகரிகமும் வளர்ந்தது, இயந்திர பயன்பாடு, நாகரிகம் நகரமயமாக்...

உணவுமுறையும் உடல் ஆரோக்கியமும்

Image
உணவுமுறையும் உடல் ஆரோக்கியமும் வணக்கம்,         பெருகிவரும் நோய்களுக்கு முக்கியக்காரணமாக நமது உணவுமுறை உள்ளது. நமது பாரம்பரிய உணவுமுறையில் அதிக அளவு கலோரிகள் இருந்தது. அதற்கேற்றார்போல் நமது கடின உழைப்பும் இருந்தது. கடின  உடல்  உழைப்பால் அத்தனைக்கலோரிகளும் எரிக்கப்பட்டு உடல் நலன் பாதுகாக்கப்பட்டது.         நமது தற்கால உணவுமுறையும் அதிக கலோரிகளைக் கொண்டதாகவே உள்ளது. ஆனால், இயந்திரமயமாக்கப்பட்ட நவீன உலகில் உடல் உழைப்பு என்பது அரிதாகிவிட்டது. அதன் காரணமாகவே நமக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், அதிக உடல் எடை போன்ற உடல்குறைபாடுகள் தோன்றுகின்றன.     இதற்கு நாம் செய்யவேண்டியது நாம் உண்ணும் உணவுகள் செரிக்குமளவுக்கு தினமும் உடல் உழைப்பை கொடுக்கவேண்டும். அது விளையாட்டு,நீச்சல்,  உடற்பயிற்சி மூலமாகவோ நமது அன்றாடபணிகளைச் செய்வதன் மூலமாகவோ இருக்கலாம்.           நமது உணவினைசரிவிகித முறையில்  எடுத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பாகும்.எந்தெந்த உணவு எந்த அளவு எடுத்துகொள்ளல...