உணவு என்பது என்ன?
உணவு என்பது என்ன?
ஓர் உயிற்கு செயல்படத்தேவையான சக்தியை அளிக்க கூடிய பொருட்கள் உணவாகும்.அதில் முதனமையானதாக, கார்போஹைட்ரேட்டு (அரிசி, கிழங்குகள், தானியங்கள்) கொழுப்பு (தாவர எண்ணெய் வித்துக்கள்,விலங்கு கொழுப்புகள்) புரதம் (பருப்பு வகைகள்,விலங்குகளின்மாமிசம், முட்டை) தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் (கீரைகள், பழங்கள்) மனிதர்கள் தனக்குத்தேவையான சக்தியை தாவர, விலங்குகளை உணவாகௌட்கொள்வதன்மூலம் பெற்றுக்கொண்டார்கள்.
ஆதியில் தனக்கான உணவை இயற்கையாக காடுகளில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். நாகரிகம் வளர வளர, நாடோடி வாழ்க்கையின் கடினத்தைஉணர்ந்த மனிதன் தனக்கான உணவுகளை தானே உற்பத்தி செய்துகொள்ளும் யுக்தியை அறிந்தான் அதுவே விவசாயம் என்பதாகும்.
ஆதிகால விவசாயம்
அவ்வாறாக இயற்கை சூழலில் காடுகளில் உள்ள ஆற்றுப்படுகைகளில் தண்ணீர் மற்றும் தாவரம் வளர ஏற்ற மண்வளம் இருந்தபடியால் அங்கேயே விவசாயம் செய்யட்துவங்கினார்கள். மனித நாகரிகமும் வளர்ந்தது, இயந்திர பயன்பாடு, நாகரிகம் நகரமயமாக்கல், மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றால் பழய விவசாய முறைகளைக்கையாள முடியாமல் தொடர்ந்து பயிர் செய்வதால் ஏற்பட்ட மன்னின் வளமிழப்பை ஈடுசெய்ய மனிதன் தான் வளர்த்த கால்னடைகளின் கழிவுகளை மண்ணை வளமாக்கும் உரமாக பயன்படுத்த துவங்கினார்கள். அதுவரை நம்க்கு விவசாயத்தால்கிடைத்த உணவுப்பொருட்களால் எந்த பாதிப்பும் உணவால் வரவில்லை.
தற்கால விவசாயம் அதீத மக்கள்த்தொகைப் பெருக்கமும்,இயற்கை சீற்றங்க்களால் விவசாய தொழில்கள் நலிவடையத்துவங்கியதாலும் போதுமான உணவுகிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உணவில்லாமல் தவிக்கையில் புதிய விவசாயமுறைகள் பின்பற்றப்பட்டு விவசாயத்தில் இயந்திரங்க்களும், செயற்கை உரங்களும், செயற்கை பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டுக்கு வரத்துவங்கின. ஆரம்பத்தில் அவற்றால் விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தபோதிலும் போகபோக மண்ணின் வளம் குறையத்துவங்கி அதிக செயற்கை உரங்க்களை பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது. செயற்கை உரங்க்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் மண்பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மனிதர்களின் உடல்னலனிலும் தீங்கான மாற்றங்க்கள் ஏற்பட்டு பல நோய்களுக்கு ஆளாக நேரிட்டது.
ஆகவே உணவென்பது ஓர் உயிரினத்தின் பசியை மட்டும் போக்குவதாக மட்டுமல்லாமல் தேவையான ஆற்றலையும், நல்ல உடல் நலட்தினையுமளிப்பதாக அமைய வேண்டும். தமிழர்களின் உண்வுமுறையானது போதுமான ஆற்றலை அளிக்ககூடியதாகவும், நோய்த்தாக்குதலில் இருந்துகாக்கும்படியாக உணவேமருந்து என்பதாக இருந்தது.தற்போது மேற்கத்திய கலச்சாரத்தாலும், நாகரீகம் என்றபோர்வையிலும் துரித உணவுகளாலும், செயற்கை உர பயன்பாட்டாலும் நாம் நமது உடல் நலத்தினை இழந்துவருகின்றோம்.




Very nice 👍 keep more
ReplyDeletethank u
Delete