உணவுமுறையும் உடல் ஆரோக்கியமும்

உணவுமுறையும் உடல் ஆரோக்கியமும்

வணக்கம்,
       பெருகிவரும் நோய்களுக்கு முக்கியக்காரணமாக நமது உணவுமுறை உள்ளது. நமது பாரம்பரிய உணவுமுறையில் அதிக அளவு கலோரிகள் இருந்தது. அதற்கேற்றார்போல் நமது கடின உழைப்பும் இருந்தது. கடின உடல் உழைப்பால் அத்தனைக்கலோரிகளும் எரிக்கப்பட்டு உடல் நலன் பாதுகாக்கப்பட்டது. 
       நமது தற்கால உணவுமுறையும் அதிக கலோரிகளைக் கொண்டதாகவே உள்ளது. ஆனால், இயந்திரமயமாக்கப்பட்ட நவீன உலகில் உடல் உழைப்பு என்பது அரிதாகிவிட்டது.அதன் காரணமாகவே நமக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், அதிக உடல் எடை போன்ற உடல்குறைபாடுகள் தோன்றுகின்றன.
    இதற்கு நாம் செய்யவேண்டியது நாம் உண்ணும் உணவுகள் செரிக்குமளவுக்கு தினமும் உடல் உழைப்பை கொடுக்கவேண்டும். அது விளையாட்டு,நீச்சல், உடற்பயிற்சி மூலமாகவோ நமது அன்றாடபணிகளைச் செய்வதன் மூலமாகவோ இருக்கலாம்.
        நமது உணவினைசரிவிகித முறையில்  எடுத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பாகும்.எந்தெந்த உணவு எந்த அளவு எடுத்துகொள்ளலாம் என்பது கீழ்கண்ட சரிவிகித உணவுப் பிரமீடு வாயிலாக அறியலாம்.
இந்த உணவுப்பிரமீடு அளவுகள் நல்ல உடல் நலனுடன் கூடிய மனிதருக்கான அளவுகளே, உடல் குறைபாடுள்ளவர்கள், வயதானோர்கள் தத்தம் மருத்துவர்களின் ஆளொசனைப்படியான உணவுகளைஎடுத்துக்கொள்வதேசிறப்பாகும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

உணவு என்பது என்ன?